கீதிகா தற்கொலை வழக்கு: இனியும் தப்ப முடியாத கோவிந் கந்தா அதிகாலையில் சரண்!
டெல்லி: விமான பணிப்பெண் கீதிகா தற்கொலை வழக்கில் தொடர்ந்தும் தலைமறைவாக இருந்து வந்த அரியானா மாநில முன்னாள் அமைச்சர் கோபால் கந்தா இன்று அதிகாலை டெல்லி அசோக் விஹார் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
விமான பணிப்பெண் கீதிகா தற்கொலை செய்து கொண்ட எழுதி வைத்த கடிதத்தில் கோபால் கந்தாதான் தமது மரணத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அமைச்சர் பதவியிலிருந்து கந்தா நீக்கப்படார். அவரை கைது செய்ய போலீசார் தேடியபோது ஓடி ஒளிந்து தலைமறைவானார். அவர் வலைவீசி தேடப்பட்டு வந்தார். அண்டை நாடான நேபாளத்துக்கு தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோபால் கந்தா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கோபால் கந்தாவின் முன்ஜாமீன் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதையடுத்து வேறுவழியின்றி இன்று அதிகாலை 4 மணியளவில் டெல்லி அசோக் விஹார் காவல்நிலையத்துக்கு சென்ற கோபால் கந்தா தாம் சரணடைவதாகக் கூறினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் கோபால் கந்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications