நீதிமன்றங்கள் மூலம் ஈமு கோழி பண்ணைகளின் சொத்துகள் முடக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: 40 ஆயிரம் பேரிடம் லட்சக்கணக்கான பணத்தை வசூலித்துவிட்டு பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் அனைத்து ஈமு கோழி பண்ணைகளின் சொத்துகளையும் நீதிமன்றம் மூலம் முடக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக ஈமு கோழிப் பண்ணைகளில் முதலீடு செய்தால் அதிக அளவு லாபம் ஈட்டலாம் என்று கூறி 36,000-க்கும் மேற்பட்ட பொது மக்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை வைப்பு நிதியாக சில ஈமு கோழிப் பண்ணை நிறுவனங்கள் திரட்டின.

பொதுமக்கள் முதலீடு செய்த தொகைக்கு ஈடாக அவர்களுக்கு ஈமு கோழிக் குஞ்சுகள் கொடுக்கப்பட்டு அதை முதலீட்டாளர்கள் அவர்களது பண்ணையிலேயே வைத்து வளர்க்க வேண்டும். இதற்காக மாதம் குறிப்பிட்ட ஒரு தொகை வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும்.

மேலும் ஈமு கோழிகளை வளர்க்க இடமில்லாதவர்களைப் பொறுத்தவரையில், அந்த பண்ணை நிறுவனங்களே ஈமு கோழிக் குஞ்சுகளை வளர்த்து மாதம் குறிப்பிட்ட ஒரு தொகையினை அந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கி, குறிப்பிட்ட காலத்திற்குப் பின் முதலீட்டுத் தொகையை திரும்ப வழங்கும் திட்டமும் சில தனியார் நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதன்படி, மாதா மாதம் வழங்கப்பட வேண்டிய தொகையை முதலீடு செய்தவர்களுக்கு, ஆகஸ்டு மாதத்தில் இருந்து மேற்படி நிறுவனங்கள் வழங்கவில்லை.

இதையடுத்து, இது தொடர்பாக சில ஈமு பண்ணை நிறுவனங்கள் மீது 16 புகார்கள் காவல் துறையினரால் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 33 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை பணம் வழங்காததற்காக 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதர குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர்.

சொத்து பறிமுதல் நடவடிக்கை

இந்தச் சூழ்நிலையில், ஈமு பண்ணையில் முதலீடு செய்தவர்களை ஏமாற்றிய ஈமு பண்ணை நிறுவனங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று எனது தலைமையில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத் துறைச் செயலாளர் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, தலைமறைவானவர்களை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், வைப்பீட்டாளர்களுக்கு பணம் வழங்காத ஈமு பண்ணை நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் பறிமுதல் செய்யவும், வைப்புதாரர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கவும் நான் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதேபோல் இந்த ஈமு பண்ணை நிறுவனதாரர்கள் தலைமறைவாகிவிட்ட காரணத்தாலும், பண்ணையில் பணிபுரிபவர்கள் அங்கிருந்து சென்றுவிட்ட காரணத்தாலும், ஈமு பண்ணைகளில் உள்ள ஈமு கோழிகளை பேணிப் பாதுகாப்பதில் தொய்வு ஏற்பட்டு இதன் காரணமாக ஈமுக் கோழிகள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தீவனம் அளித்து அந்தக் கோழிகளை பேணிப் பாதுகாக்க நான் உத்தரவிட்டுள்ளதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது தவிர, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்தும், கால்நடை பராமரிப்புத் துறையிலிருந்தும் கால்நடை மருத்துவர்கள் இந்தப் பண்ணைகளுக்கு சென்று கோழிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.ஈமு கோழிக் குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைய இன்னும் 3 மாத காலம் ஆகும் என்பதால், அவற்றைப் பராமரிக்கத் தேவையான நிதி வசதியை கால்நடை பராமரிப்புத் துறைக்கு வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். கோழிக் குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைந்தவுடன் அவற்றை விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் தொகை கோழித் தீவனச் செலவிற்கு ஈடு செய்யப்பட்டு, மீதத் தொகை வைப்பீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+