ரோஹித் சர்மாவுடன் நடிகை சோபியா ஹயாத் டேட்டிங்?

இந்திய கிரிக்கெட் அணியின் இளம்வீரர் ரோஹித் சர்மா(25). ஐபிஎல் 5 தொடரில் சிறப்பாக ஆடிய இவர், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் கலந்து கொண்டு 5, 0, 0, 4, 4 என்று மொத்தம் 13 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
இதனால் இந்திய அணியில் தொடர்ந்து ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தற்போது புதிய தோழியுடன் இவர் ஊர் சுற்றி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவர் வேறு யாருமல்ல இங்கிலாந்து-இந்திய நடிகையான சோபியா ஹயாத் தான்.
கவர்ச்சி நடிகையான சோபியா, 'டைரி ஆப் எ பட்டர்பிளை' என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் ஜீ டிவியில் 'சூப்பர்ஸ்டட்' என்ற ரியாலிட்டி ஷோவை 3 ஆண்டுகளாக நடத்தி வந்தவர். தற்போது ரோஹித் சர்மாவின் நெருங்கிய தோழியாக மாறியுள்ள சோபியா, ஆங்காங்கே சந்தித்து நட்பை இன்னும் ஆழமாக்கி வருவதாக தெரிகிறது.
இது குறித்து மிட் டே பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது,
ரோஹித் சர்மாவும், சோபியாவும் ஒன்று சேர்ந்து அதிகம் நேரம் ஊர் சுற்றி வருகின்றனர். விருந்துகளில் பங்கேற்பது, நண்பர்களை சந்திப்பது, காபி குடிக்க செல்வது என்று எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து தான் சென்று வருகின்றனர்.
சமீபத்தில் மேற்கு மும்பை பகுதியில் உள்ள 'ஜுகு' என்ற ஹோட்டலில் இருவரும் சேர்ந்து வந்து காபி குடித்து சென்றனர். அப்போது சுமார் 5 மணிநேரம் இருவரும் பேசிவிட்டு, ஹோட்டலை விட்டு வெளியேறினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களை குறித்த பல தகவல்கள் வெளியாகி வருவது குறித்து கேட்டதற்கு, நாங்கள் இருவரும் நண்பர்கள் அவ்வளவு தான் என்று கூலாக பதிலளித்தார் சோபியா.
இது குறித்து சோபியாவின் நெருங்கிய தோழி ஒருவர் கூறியதாவது,
ரோஹித் சர்மாவும், சோபியாவும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். இதனால் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இதனால் அவர்களின் நட்பை குறித்து அவர்களே கூறுவது தான் சிறந்தது என்றார்.
ஆனால் இதை மறுத்துள்ள ரோஹித் சர்மா, நான் தனிமையாக தான் உள்ளேன் என்று டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications