வடகிழக்கு மாநிலத்தவர் விவகாரம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு மாநிலத்தவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திபேந்திரநாத் சாரங்கி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அசாமில் நிகழ்ந்து வரும் இன மோதலையடுத்து நாட்டின் பிற மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தால் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் இரவோடு இரவாக பல்லாயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் ரயில் நிலையங்கள் கூட்டங்களால் நிரம்பி வழிகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் இதே நிலைமைதான் காணப்படுகிறது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் வாழும் வடகிழக்கு மாநிலத்தவர் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்திருந்தார். இந்நிலையில் சென்னை கோட்டையில் தலைமைச் செயலாளர் திபேந்திரநாத் சாரங்கி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உள்துறை செயலாளர் ராஜகோபால், டிஜிபி ராமானுஜம், ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வடகிழக்கு மாநிலத்தவருக்கு தக்க பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications