கேள்வி தாளில் 95 கேள்விகள் அச்சாகவில்லை: குரூப்-4 தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஜூலை 7ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 தேர்வின் கேள்வி தாளில் 95 கேள்விகள் அச்சாகவில்லை என்ற புகாரை கருத்தில் கொண்டு தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை 7ம் தேதி நடைபெற்றது. குரூப்-4 தேர்விற்கான கேள்வித் தாளில் சில கேள்விகள் அச்சாகவில்லை என்று தர்மபுரி மாவட்டம் முருக்கம்பட்டியை சேர்ந்த எம்.சின்னசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 718 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), 27.4.2012 அன்று குரூப்-4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தேன்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிநாயக்கனஹள்ளியில் உள்ள தனியார் கல்லூரி தேர்வு மையம் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு மையத்தில் 7.7.2012 அன்று எழுத்து தேர்வு எழுத சென்றேன். எனக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் 200 கேள்விகளில், 60வது கேள்வி முதல் 153வது கேள்வி வரையிலான கேள்விகள் அச்சாகவில்லை. 200 கேள்விகளில், வெறும் 105 கேள்விகள் மட்டுமே அச்சாகி இருந்தது. 95 கேள்விகள் அச்சாகவில்லை.

இதனால் இந்த 95 கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இது குறித்து தேர்வு அறை மேல்பார்வையாளரிடம் புகார் செய்தேன், ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். இந்த கேள்வித்தாள் குறைபாடுகள் குறித்து, டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு பல புகார் கடிதம் அனுப்பினேன்.

மேலும் குரூப்-4 தேர்வு எனக்கு மட்டும் நடத்த வேண்டும் என்றும், பல கோரிக்கை மனுவை 19.7.2012 அன்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளரிடம் கொடுத்தேன். அந்த மனு பரிசீலனையில் உள்ளது. இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

டி.என்.பி.எஸ்.சி. அச்சிட்ட கேள்வித்தாள்கள் குறைபாடுகளுடன் இருந்ததால், வேலை பெறும் எனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குரூப்-4 தேர்வு குறித்து 27.4.2012 அன்று வெளியிட்ட அறிவிப்பையும், 7.7.2012 அன்று நடந்த தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். குரூப்-4 தேர்வை மீண்டும் நடத்த டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். 7.7.2012 அன்று நடந்த குரூப்-4 தேர்வின் முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தவில், 7.7.2012 அன்று நடந்த குரூப்-4 தேர்வின் முடிவை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+