தூத்துக்குடியில் தீ விபத்து ஏற்பட்ட அனல்மின் நிலையத்தை மூடி நிர்வாகிகளை கைது செய்க: புதிய தமிழகம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தீ விபத்து ஏற்பட்ட தனியார் அனல்மின் நிலையத்தை மூடி அதன் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தூத்துக்குடி தனியார் அனல் மின் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் காவல்துறை உதவியுடன் இந்த விவகாரத்தை மூடி மறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை அருகே தனியார் கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலியானதற்கு கல்லூரியின் தாளாளரை கைது செய்தது தமிழக அரசு. ஆனால் தனியார் அனல்மின் நிலைய விவகாரத்தில் தயக்கம் காட்டுகிறது. அதே நேரத்தில் அன்ல்மின் நிலைய தலைவர்களை விட்டுவிட்டு யாரோ இருவரை கைது செய்திருக்கின்றனர்.
எந்த ஒரு பாதுகாப்பு வசதியும் இல்லாமல் தனியார் அனல்மின் நிலையம் லாபம் ஈட்டி வருகிறது. இந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும். உரிய பாதுகாப்பு வசதிகளை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த பின்னர் அன்ல் மின் நிலையம் செயல்பட அனுமதிக்கலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications