தமிழக மீனவர்களை காக்கக் கோரி பிரதமர், சோனியாவை சந்தித்த திமுக எம்.பிக்கள்
டெல்லி: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி திமுக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினர்.
திமுக எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று டெல்லியில் சந்தி்த்து பேசினர். அப்போது அவர்கள் அண்மையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த அறிக்கையை பிரதமரிடம் அளித்தனர். மேலும் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்றுமாறு அவர்கள் பிரதமரை வலியுறுத்தினர்.
இது தவிர தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் அவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடம் இருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு அவர் இந்த விவகாரம் குறித்து பிரதமருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
முன்னதாக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று மீனவர் பிரச்சனை குறித்து கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications