For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் நீடிக்கும் மனிதப் பேரவலம்... ராஜபக்சே மகனுக்கோ விண்வெளிக்கு செல்ல பயிற்சி!

By Mathi
Google Oneindia Tamil News

Rohitha Rajapaksa
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பயிற்சியை அளிக்க ரசியா முன்வந்துள்ளது.

இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் துறை படிப்பில் அண்மையில் ரோஹித பட்டம் பெற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜபக்சவின் மனைவி சிராந்தி மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தமது தந்தையிடம் விண்வெளிக்கு போகவேண்டும் என்று ரோஹித ராஜபக்ச அடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து ரசிய அதிபரிடம் மகிந்தவும் பேசியிருக்கிறார். ரசிய அதிபர் புதினும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து ராஜபக்சவுக்கும் அவரது மகனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதையடுத்து ரோஹித ராஜபக்ச விரைவில் ரஷியா செல்ல இருக்கிறார். இதற்காக பெருந்தொகையான பணத்தை ராஜபக்ச ரசியாவுக்குக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை இலங்கை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்து ராஜபக்சவை விளாசத் தொடங்கியிருக்கின்றன. நாட்டின் விலைவாசி விண்ணை முட்டி நிற்கையில் ராஜபக்சவின் மகனுக்கு விண்வெளி பயணம் ஒரு கேடா? என்றும் அந்த கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

English summary
Rohitha Rajapaksa, youngest son of President Mahinda Rajapaksa, received a letter from Russian President Valdimir Putin recently. Putin had conveyed his wishes for young Rajapaksa who earlier inquired about the Russian Aero Space Agency to pursue his astronomical studies and training further.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X