பிடித்துச் சென்ற 13 மீனவர்களையும் விடுவித்தது இலங்கை!

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர், கைது செய்து வருகின்றனர். இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மகா அமைதியாக இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
எத்தனையோ முறை தமிழகத் தலைவர்கள் மத்திய அரசுக்கு காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கோரிக்கை வைத்து விட்டனர். ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
நேற்று கூட பிரதமருக்கு இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நான்காவது முறையாக கடிதம் எழுதியிரு்நதார். அதேபோல திமுக தலைவர் கருணாநிதியும் சில கருத்துக்களைக் கூறியிருந்தார்.
ஆனால் இவர்கள் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலேயே இலங்கை கடற்படை தனது கேவலமான முகத்தைக் காட்டி விட்டது. அதாவது மண்டபம் பகுதி மீனவர்கள் 13 பேரை அது பிடித்துச் சென்று விட்டது.
ராமேஸ்வரம் - மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க நேற்று காலை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது.
கட்டைகள், பாட்டில்களை வீசி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி விட்டதாகவும், மீனவர்களில் 13 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை பிடித்துச் சென்றுவிட்டதாகவும் தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.
மேலும் இந்தத் தாக்குதலில் ஞானசேகரன் என்ற மீனவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து மண்டபம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இந்தநிலையில் பிடித்துச் சென்ற மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்குக் கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் அங்கு வைத்து அவர்களை விசாரித்தனர். பின்னர் மீனவர்களையும், அவர்களது 3 படகுகளையும் விடுவித்தனர். இதையடுத்து இன்று மாலை தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் வந்து சேருவார்கள் என்று தெரிகிறது.
நேற்றுதான் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது என்பது இந்தியாவுக்கு பகிரங்கமாக இலங்கை விடும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications