மதுரையில் குடிகார மகனை கொலை செய்த தாய் கைது!
மதுரை: மதுரையில் குடித்துவிட்டு தொல்லை கொடுத்து வந்த மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை அடுத்த மகாத்மா காந்தி நபர் பகுதியை சேர்ந்தவர் தத்தம்மாள். இவரது கணவர் மாரியப்பன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தத்தம்மாளுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
திருமணமாகாத மகன் பொன்னிருள் உடன் தத்தம்மாள் வசித்து வந்தார். பொன்னிருளுக்கு குடி பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பொன்னிருள், தாயை அடித்து உதைத்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பொன்னிருள், வழக்கம் போல தாய்க்கு தொல்லை கொடுத்துவிட்டு படுத்து உறங்கிவிட்டார். மகனின் தொல்லையை தாங்க முடியாமல் தவித்த தத்தம்மாள், மகனின் தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பொன்னிருள் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மகனை கொலை செய்த தத்தம்மாளை கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications