விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி ரயில் மறியல்: 500 பெண்கள் உள்பட 1,000 பேர் கைது
திருவாரூர்: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியல் செய்த 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும், திருவாரூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும், ஏழை விவசாயிகளின் குடும்பங்களுக்கு மாதாமாதம் ரூ.10,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய அமைப்புகள் சேர்ந்து ரயில் மறியல் போராட்டதிற்கு அழைப்பு விடுத்தன.
அதன்படி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் இன்று மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் திருவாரூர்-பட்டுக்கோட்டை ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பெண்கள் உள்பட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications