வரதட்சணை தராததால் திருமணம் நிறுத்தம்: மாப்பிள்ளையின் பெற்றோர் உள்பட 3 பேர் கைது
பெரம்பலூர்: வரதட்சணை கொடுக்காததால் திருச்சியில் திருமணம் நின்றுபோனது. இதையடுத்து மணமகனின் பெற்றோர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். அவரது மனைவி தமிழ்செல்வி. அவர்களின் மகள் மகாலெட்சுமிக்கும்(21), திருச்சி மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த வீராசாமி-பவீனா தம்பதியின் மகன் ராஜேசுக்கும் (29) திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து இருவீட்டாரும் பத்திரிக்கை அடித்து உற்றார், உறவினர்களை திருமணத்திற்கு அழைத்தனர். திருச்சி அண்ணா நகர் போலீஸ் காலனியில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து நேற்று திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்தில் கலந்துகொள்ள உறவினர்கள் வந்தனர். வந்திருந்த விருந்தாளிகளுக்கு சாப்பாடு தயாரானது. இந்நிலையில் பெண் அழைப்புக்கு மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை.
மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக 4 பவுன் நகை மற்றும் ரூ.20,000 ரொக்கம் தராததால் பெண் அழைப்புக்கு வரவில்லை என்றும், முழு வரதட்சணையையும் தந்தால் மட்டுமே திருமணம் நடக்கும் என்றும் மாப்பிள்ளை வீட்டார் கண்டிப்பாகத் தெரிவித்துவிட்டனர். இதனால் திருமணம் நின்றுபோனது. இதையடுத்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கிளம்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மணமகளின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மணமகனின் தந்தை, தாய், தாயின் அக்கா செல்வமணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணமகனை வலைவீசித் தேடி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications