இங்கிலாந்தில் 1 வாரம் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவி்ட்டு சென்ற 'குடிகார' தாய்க்கு சிறை
லண்டன்: வீட்டில் குழந்தையை தனியாக விட்டுவிட்டு தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தி ஆனந்தமாக இருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவருக்கு 15 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பிரெகன் நகரைச் சேர்ந்தவர் டாலி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 20 வயதேயான அவர் திருமணமாகாமலேயே ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்நிலையில் அவர் தனது 15 மாத குழந்தையை சுமார் ஒரு வார காலமாக வீட்டில் தனியாக விட்டுவிட்டு தனது தோழிகள் வீட்டுக்கு சென்று மது அருந்தி ஆனந்தமாக இருந்துள்ளார்.
அந்த ஒரு வாரமும் அவர் ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வந்து குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு அதை இருட்டான அறையில் விட்டுவிட்டு சென்றுள்ளார். இங்கிலாந்தின் நடுக்கும் குளிரில் அந்த குழந்தை இருந்த அறையில் ஹீட்டர் கூட இயங்கவில்லை. இருட்டில் இருந்த குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து வீட்டுக்குள் புகுந்தபோது வீடு முழுவதும் அழுக்குத் துணி, காலி பீர் பாட்டில்கள், அழுக்கான டயப்பர்கள் ஆங்காங்கே கிடந்துள்ளது. குழந்தை அழுக்கான துணியில் டயப்பர் மாற்றாமல் இருந்துள்ளது. சுமார் 24 மணிநேரமாக குழந்தையை யாரும் கவனிக்கவேயில்லை. போலீசார் குழந்தையை தூக்கிச் சென்று அதற்கு நல்ல துணி போட்டு, டயப்பர் மாற்றியுள்ளனர்.
அதற்கு சாப்பாடு கொடுத்தபோது அது சாப்பிட்ட வேகத்தைப் பார்த்தால் அது பல நாட்கள் பட்டினியாகக் கிடந்தது தெரிய வந்தது.
பின்னர் குழந்தையின் தாய் டாலியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு குழந்தையை கவனிக்காத குற்றத்திற்காக 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு தண்டனை கிடைத்தவுடன் டாலி நீதிமன்றத்திலேயே கதறி அழுதார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications