திமுக நல்லா போடுதப்பா டிராமா... பொன். ராதா விளாசல்!

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் திமுக மிகச் சிறப்பாக நாடகமாடி வருகிறது. இது அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஊன்று கோலாகவும் உறுதுணையாகவும் இருந்தது மத்தியில் ஆளும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசுதான். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்கத் தவறுவதும் இதே அரசுதான். இலங்கை கடற்படையை கண்டித்து இதுவரை திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக போராட்டம் அறிவித்திருந்தது. ஆனால் அந்த போராட்டத்தையும் திமுக கைவிட்டுவிட்டது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக திமுக இரட்டை வேடம் போடுகிறது.

திமுக நடத்திய டெசோ மாநாட்டின் நோக்கம் இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்காக அல்ல. கருணாநிதி தன்மீதான களங்கத்தை துடைக்க நடத்திய நாடகம். திமுகவின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள் என்று அவர் விளாசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+