சத்தியமங்கலத்தில் கொப்பரை தேங்காய் மோசடி: ரூ.200 கோடி அபேஸ்
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கொப்பரைத்தேங்காய் நிறுவனம் ஒன்று 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பணத்தை திரும்ப பெற்றுத்தர வலியுறுத்தி முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.
சத்தியமங்கலத்தில் உள்ள நந்து கொப்பரா என்ற நிறுவனம் ரூ.1,50,000 கட்டினால், வாரம் ரூ.4,000 தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தது.மேலும் நாட்டுக்கோழி வியாபாரத்தில் ரூ.1 லட்சம் கட்டினால், மாதம் 8,000 தருவதாகவும் வாக்குறுதி அளித்தது.
இதனை நம்பிய முதலீட்டாளர்கள் பல லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் விளம்பரத்தில் கூறியபடி நந்து நிறுவனம் பணம் தரவில்லை. நிறுவனத்தின் உரிமையாளர் நந்தகுமார் திடீர் என்று தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் நந்து கொப்பரை நிறுவனம் மீது ஈரோடு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவான நந்து நிறுவனத்தின் உரிமையாளர் நந்தகுமாரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏற்கனவே ஈமு கோழி மோசடி, நாட்டுக்கோழி மோசடி வரிசையில் தற்போது கொப்பரைத் தேங்காய் மோசடியும் சேர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடத்தில் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் கு. செல்லமுத்து, கொப்பரைத் தேங்காய் மோசடி பற்றி எச்சரித்திருந்தார். அவர் கூறி சில தினங்களுக்குள் இந்த மோசடி வெளியே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications