கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்று நாடகமாடிய 6 குழந்தைகளின் தாய்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் முருகன். டிராக்டர் டிரைவர். அவர் மனைவி சுமதி. அவர்களுக்கு 3 பெண்கள், 3 ஆண்கள் என 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி முருகன் திடீரென இறந்துவி்ட்டார். வீட்டிற்கு வெளியே வந்தபோது தனது கணவர் சுருண்டு விழுந்து இறந்துவிட்டதாக சுமதி தெரிவித்ததன்பேரில் முருகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் முருகன் கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் முருகனின் வீட்டை கண்காணித்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி முருகன் வீட்டுக்கு வந்து சுமதியை சந்தித்துவிட்டு சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுமதியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது,

சுமதிக்கும் அதே தெருவைச் சேர்ந்த அய்யாகுட்டி மகன் கரையாண்டிக்கும் நீண்ட காலமாக கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தனர். இதை அறிந்த முருகன் அவர்களை கண்டித்தார். இந்நிலையில் முருகனின் மூத்த பெண்ணுக்கு சடங்கு நடத்த சுமதி கடன் வாங்கினார்.

இதை திரும்பச் செலுத்த அவர் கணவரிடம் பணம் கேட்டார். ஆனால் முருகன் பணம் தர மறுத்துவிட்டார். கள்ளக் காதலுக்கு இடையூறாக இருப்பதுடன் பணம் வைத்துக் கொண்டே தரமறுத்ததாலும் முருகனை கொலை செய்ய சுமதியும், கரையாண்டியும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 14ம் தேதி அவருக்கு அளவுக்கு அதிமாக மது வாங்கி கொடுத்தனர்.போதை மயக்கத்தில் இருந்த முருகனை சுமதி தலையணையால் அழுத்த கரையாண்டி அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில் முருகன் இறந்தார். உடனடியாக இருவரும் சேர்ந்து உடலை வீட்டுக்கு முன் போட்டனர். நன்றாக இருந்த தனது கணவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்துவிட்டதாக சுமதி கதறி அழுது ஊர் மக்களை நம்ப வைத்தார்.

இதையடுத்து முருகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் முருகனின் வீட்டை தீவிரமாக கண்காணி்த்தபோது குட்டு வெளிப்பட்டது என்றனர்.

இதையடுத்து போலீசார் சுமதியை கைது செய்து தலைமறைவான கரையாண்டியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+