மன்மோகன், கட்காரி வீடுகள் முன் போராட்டம் நடந்த ஹஸாரே குழுவுக்கு அனுமதி இல்லை - பலத்த பாதுகாப்பு!!

நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கேடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் பாராளுமன்றத்தை முடக்கி போட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகவேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
அதே சமயம், ஹசாரே குழுவினர் காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டு கட்சிகள் மீதும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தை இரண்டு கட்சிகளும் மூடி மறைக்கப் பார்க்கின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, இதை கண்டித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், பாரதீய ஜனதா தேசிய தலைவர் நிதின் கட்காரி ஆகியோர் வீடுகள் முன்பு ஞாயிற்றுக்கிழமை (நாளை) முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக ஹசாரே குழுவினர் அறிவித்தனர். அரவிந்த் கெஜ்ரிவால் இதில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. மீறி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இன்னொரு பக்கம் முன்னெச்சரிக்கையாக, மத்திய அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மன்மோகன் சிங், நிதின்கட்காரி வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர்களது வீடுகளுக்கு செல்லும் சாலைகளில் போலீசார் நிறுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய டெல்லியில் உள்ள பெரும்பாலான மெட்ரோ ரெயில் நிலையங்கள் நாளை மூடப்படுகின்றன.
மத்திய செயலகம், உத்யோக்பவன், படேல்சவுந், ரேஸ்கோர்ஸ், ஜோர்பேக், கான் மார்க்கெட் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடி இருக்கும் என்று மெட்ரோ ரெயில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
டெல்லி போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைகளை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications