உதகையில் பயிற்சி பெற்று வரும் சிங்கள ராணுவத்தினரை வெளியேற்றுக: மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் உதகை வெலிங்டன் மையத்தில் பயிற்சி பெறும் சிங்கள ராணுவத்தினரை உடனே வெளியேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இலங்கை ராணுவ வீரர்கள் திசநாயக மகோத்த லாலங்கே மற்றும் ஹவாவாசம் ஆகியோருக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இருவருக்கும் கடந்த 4 மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதுபோன்ற நடவடிக்கை, தமிழக மக்கள் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே, இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications