Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீடியாவை தாக்கினால் நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்- திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊடகத் துறையின் சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதையும், நிர்ப்பந்தங்கள் உருவாக்குவதையும் விடுதலைச் சிறுத்தைகள் வேடிக்கைப் பார்த்து கொண்டு இருக்காது. நசுக்கப்படும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்று தொல்.திருமாவளன் எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கடந்த வாரம் ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த ஒரு மாணவியின் தற்கொலையை படம் பிடிக்க வந்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்பட கலைஞர் ஆல்பின் மேத்யூ ஐ.ஐ.டி பேராசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

மேத்யூ அவர்களின் கேமரா சேதப்படுத்தப்பட்டு, அவருக்கு ரத்த காயம் ஏற்படும் அளவுக்கு ஐ.ஐ.டி வளாகத்தில் அவர் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் தான் மேத்யூவை மீட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுவினர் மீது சென்னைக்கு அருகில் அவர்கள் குவாரிகளை படமெடுத்த போது தாக்குதல் நடத்தப்பட்டதையும் விடுதலைச் சிறுத்தைகள் கடுமையாக கண்டிக்கிறது.

இந்த நிலையில் ஐ.ஐ.டி விவகாரம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற பத்திரிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட இணை ஆணையாளர் சேஷசாயியின் செயலும் கண்டனத்துக்குரியது.

ஒரு சாலை மறியலுக்கு பிறகே அவர்கள் கொடுத்த புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது ஜனநாயகத்துக்கு அழகல்ல. தவிர தாக்கப்பட்ட புகைப்பட கலைஞருக்கு எதிராக ஐ.ஐ.டி பேராசிரியர் கொடுத்த பொய் புகாரை, காவல் துறை எந்த விசாரணையும் செய்யாமல் பதிவு செய்து, நடவடிக்கை எடுப்பதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

ஐ.ஐ.டி என்கிற கல்வி நிறுவனம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்பதை விடுதலை சிறுத்தைகள் சுட்டிக் காட்ட விரும்புகிறது. அங்கு நடப்பதை குறித்து செய்தி சேகரிக்க முற்படும் ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு ஊடக சுதந்திரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதையும், நிர்ப்பந்தங்கள் உருவாக்குவதையும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரம் போன்ற விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு அமைப்பு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறது.

எக்ஸ்பிரஸ் புகைப்பட கலைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் எந்தவித பாரபட்சமுமின்றி நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. அப்படி காவல்துறை செயல்படாத பட்சத்தில், விடுதலைச் சிறுத்தைகள் நேரடியாக களத்தில் இறங்கி நசுக்கப்படும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+