நெல்லையில் ஜாமீன் கிடைக்காததால் வக்கீலை தாக்கிய கைதி
நெல்லை:நெல்லையில் ஜாமீன் கிடைக்காத ஆத்திரத்தில் தனது வழக்கறிஞரைத் தாக்கிய திருவனந்தபுரம் கைதியை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுலைமான் என்பவரின் மகன் முகமது காசிம். அவர் மீது திருவனந்தபுரம், நாகர்கோவில் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கேரளாவில் உள்ள வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் திருவனந்தபுரத்தில் உள்ள சிறையில் உள்ளார். இந்நிலையில் நாகர்கோவிலுள்ள ஒரு வழக்கு தொடர்பாக அவர் ஜாமீன் கோரி பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள சிறுவர் நடுவர் நீதிகுழுமத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணைக்காக அவரை கேரள போலீசார் நெல்லைக்கு அழைத்து வந்திருந்தனர். அவரது மனுவை விசாரித்த நீதிபதி ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் அவர் பாளையங்கோட்டை மகாராஜா நகரைச் சேர்ந்த தன்னுடைய வழக்கறிஞர் ஜான் பிரைட் மீது ஆத்திரமடைந்தார். நீதிமன்றத்துக்கு வெளியே ஜான் பிரைட் வந்தபோது அவரை முகமது காசிம் அடித்து உதைத்தார்.
இந்த சம்பவம் குறித்து ஜான் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன், எஸ்.ஐ. சாமி ஆகியோர் விசாரணை நடத்தி முகமது காசிமை கைது செய்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications