மதுரை இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணலை நெல்லையில் நடத்திய மு.க. ஸ்டாலின்

திமுக இளைஞரணிக்கு நிர்வாகிகளைத் தேர்வும் செய்யும் பணியில் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டுள்ளனர். அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தி தானே நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார்.
மத்திய அமைச்சரும், ஸ்டாலினின் சகோதரருமான மு.க. அழகிரி இருக்கும் மதுரை பகுதி நிர்வாகிகளுக்கான நேர்காணலை அங்கே நடத்தாமல் நெல்லையில் நடத்தியுள்ளனர்.
மதுரையில் இந்தக் கூட்டத்தை நடத்த முடியாத நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது.
மதுரை, தூத்துக்குடி மாநகர பகுதி திமுக இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் நேர்காணல் பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள வி.எம்.எஸ். மகாலில் நேற்று நடந்தது. மு.க. ஸ்டாலின், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், சுகவனம் எம்.பி., தங்கவேல் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். தூத்துக்குடி மாநகரைச் சேர்ந்த 100 பேருக்கும், மதுரை மாநகரைச் சேர்ந்த 150 பேருக்கும் நேர்காணல் நடந்தது.
அதன் பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணிக்கான நேர்காணல் முடிந்துவிட்டது. வேலூர் மாநகரத்தில் மட்டும் நடந்த வேண்டியுள்ளது. அங்கு செப்டம்பர் மாதம் 2ம் தேதி நேர்காணல் நடத்தப்படும். தொடர்ந்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தேர்வு சென்னையில் நடத்தப்படும். இதற்கான
விண்ணப்பங்கள் தற்போது வந்துள்ளன. தலைமையின் அனுமதி பெற்று விரைவில் இளைஞரணி 2வது மாநில மாநாடு நடத்தப்படும் என்றார்.
முன்னதாக புன்னைகாயலைச் சேர்ந்த மாலுமி டனிஸ்டன் சோமாலியா கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதால் அவரை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினர் ஸ்டாலினிடம் மனு அளித்தனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications