லண்டனில் பயிற்சி பெற ஐ.ஜி. சிவனாண்டிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு
சென்னை: லண்டனில் போலீஸ் பயிற்சி பெறச் செல்ல ஐ.ஜி. சிவனாண்டிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் அகாடமி மற்றும் லண்டனில் உள்ள பயிற்சியகத்தில் பயிற்சி பெற தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ஐ.ஜி. சிவனாண்டி, உளவுத்துறை டி.ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை நகர உளவுத்துறை இணை கமிஷனர் நல்லசிவம், தஞ்சை டி.ஐ.ஜி. அமல்ராஜ், சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் சங்கர், காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. திருஞானம், தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரன் ஆகியோருக்கு பயிற்சி அளிக்க அனுமதி அளிக்குமாறு டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, உளவுத்துறை டி.ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை நகர உளவுத்துறை இணை கமிஷனர் நல்லசிவம், தஞ்சை டி.ஐ.ஜி. அமல்ராஜ், சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் சங்கர், காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. திருஞானம், தூத்துக்குடி எஸ்.பி. ராஜேந்திரன் ஆகிய 6 பேருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஐ.ஜி. சிவனாண்டிக்கு மட்டும் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து அந்த 6 போலீஸ் அதிகாரிகளும் நேற்று முதல் ஹைதராபாத்தில் உள்ள பயிற்சியகத்தில் பயிற்சிக்கு சேர்ந்தனர். அங்கு 4 வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2 வாரம் லண்டனில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சிக்கு செல்ல ஐ.ஜி. சிவனாண்டி மட்டும் தமிழக அரசு தடை விதித்துள்ளது காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நில மோசடி வழக்கில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் எழுந்ததையடுத்து மேற்கு மண்டல ஐ.ஜி. சிவனாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications