கதவைத் திறந்து எட்டிப் பார்த்தவுடன் பின்லேடனின் தலையில் சுட்டோம்-'சீல்' படை வீரர்

முன்னதாக ஒசாமா பின் லேடனைத் தேடிக் கொண்டு அவரது அறைக்குள் நுழைந்தபோது அவர் துப்பாக்கியை எடுக்க முயன்றதாகவும், இதையடுத்தே அவரை சுட்டதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.
ஆனால், இந்தத் தாக்குதலை நடத்திய சீல் படையின் வீரர்களில் ஒருவரான மெட் பிஸோனெட் எழுதியுள்ள No Easy Day என்ற புத்தகம் அடுத்தவாரம் வெளியாக உள்ளது.
இந்தப் புத்தகத்தை அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் நேற்று பெற்றுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒசாமா பின் லேடன் தனது அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே எட்டிப் பார்த்தார். இதையடுத்து அவரை உடனே தலையில் சுட்டோம் என்று பிஸோனெட் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் ஒசாமா கொல்லப்பட்ட விதம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அரசு வெளியிட்ட முந்தைய தகவலின்படி, ஒசாமா துப்பாக்கியை எடுக்க முனைந்தபோது தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் ஒசாமா சரணடைந்தால் அவரை உயிரோடு பிடிக்குமாறு தங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் பிஸோனெட் எழுதியுள்ளார்.
ஒசாமா சுடப்பட்ட விதம் குறித்து எழுந்துள்ள இருவேறு கருத்துக்கள் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டாமி வெடோர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications