எங்கே இருக்கிறார் கில்லாடி சஹானாஸ்?... பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்!

சஹானாஸைப் பிடிக்க அவரது முன்னாள் காதலர்கள், கணவர்களை விட்டு முயற்சித்துப் பார்த்தனர். ஆனால் பலன் தரவில்லை. சஹானாஸ் தனது செல்போனை சுவிட்ச் ஆப் வைத்து விட்டார். அவர் எந்த எண்ணைப் பயன்படுத்துகிறார் என்பதும் தெரியவில்லை. மேலும் அடிக்கடி சிம் கார்டை மாற்றி விடுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் போலீஸாருக்குப் பெரும் திணறலாகியுள்ளது. இந்த நிலையில் சஹானாஸின் தோழி ஒருவரைப் போலீஸார் உதவிக்கு அணுகியுள்ளதாக தெரிகிறது. அவர் மூலம் சஹானாஸ் இருப்பிடத்தை அவர்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இப்போது எப்படியாவது அவரைப் பிடித்து விட வேண்டும் என்று தீவிரமாக உள்ளனராம் போலீஸார்.
சஹானாஸ் சென்னையில் இருக்கிறாரா அல்லது கேரளாவுக்கு ஓடி விட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் சென்னையிலேயே அவர் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சஹானாஸ் சிக்கினால்தான் அவர் மீதான புகார்கள் உண்மையா, அவர் மோசடி செய்தாரா என்ற விவரம் தெரிய வரும். ஆனால் தன் மீதான புகார்களை வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சஹனாஸ் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications