ஜான் பிரபாகரனின் ரூ500 கோடி மோசடி- குவியும் புகார்கள்- பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்
சென்னை: கிறிஸ்தவ போதர்களிடமும் பொதுமக்களிடமும் ரூ500 கோடி மோசடி செய்த ஜான்பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார்கள் குவிந்து கொண்டே வருகின்றனர். இதனால் இந்த வழக்கு தற்போது பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது.
ரூ.2,100 கட்டினால், ஆண்டு முடிவில் ரூ.13 ஆயிரத்து 750 கிடைக்கும் என்பதுதான் ஜான் பிரபாகரனின் வசீக பிரச்சாரம். இதை நம்பி கிறிஸ்தவ போதகர்களும் பொதுமக்களும் இழந்த தொகை ரூ500 கோடி! ஜான்பிரபாகரனை நம்பி பொதுமக்களிடம் வசூலித்து ஏமாந்த போதர்கள் ஏராளம்! சென்னையில் ஹிம் என்ற அறக்கட்டளையின் பெயரில் இந்த மோசடியை அரங்கேற்றியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வசூல் வேட்டை நடத்தி பொதுமக்கள் பணத்தை விழுங்கியிருக்கிறது ஜான்பிரபாகரன் கும்பல்! இதில் ஜான்பிரபாகரனும் அவரது கோஷ்டியும் "கர்த்தர்தான் வட்டி கொடுக்கிறார்" என்று கூறியே ஏமாற்றியிருக்கிறது என்பதுதான் ஹைலைட்!
இவர்கள் மீது தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தொடர்ந்து புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் காஞ்சிபுரம் மாவட்டம் வேம்பனூரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்றும் புகார் கொடுத்தனர்.
தமிழகத்தில் மட்டுமின்றி வேறு மாநிலங்களிலும் மோசடி நடந்திருப்பதால் சென்னை மாநகர காவல்துறையினர் இந்த மோசடிப் புகாரை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்ற காவல்துறை தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளனர். அப்படி பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்படும்போது எஸ்.பி. தகுதியிலான காவல்துறை அதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
ஆந்திர சிறையில் ஜான் பிரபாகரன்
முக்கிய குற்றவாளியான ஜான் பிரபாகரன் இதேபோன்ற மோசடி வழக்கில் ஆந்திர மாநிலத்தில் சிறையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications