இந்தியாவில் புதிய தூதரகங்களை திறக்க இலங்கை அரசு முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை விரிவுபடுத்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

இப்புதிய திட்டத்தின்படி இந்தியாவுக்கு வரும் பிரதிநிதிகள், தூதவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தில் கூடுதலாக 2 தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க உள்ளனர்.

மும்பையில் உள்ள தூதரகத்துக்கு இலங்கை வெளியுறவுத் துறை உயர் அதிகாரியை தலைமைப் பதவியிலும், இதற்கு அடுத்த நிலை அதிகாரியாக வர்த்தகத் துறையில் இருந்து ஒருவரையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள தூதரகத்தில் இந்தியாவுடனான வர்த்தகம், முதலீடு குறித்து தொடர்பு வைத்துக் கொள்ள ஒரு அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.

கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ள இலங்கை தூதரகத்தில் முதன்மை அதிகாரி, உதவியாளர், இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் தூதரகத்தை விரிவுபடுத்துகிறது இலங்கை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+