ஆப்கானில் இரண்டு தற்கொலைப்படைத் தாக்குதல்கள் - 12 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல் : ஆப்கானிஸ்தானில் இன்று நிகழ்த்தப்பட்ட இருவேறு தற்கொலைத் தாக்குதல்களில் மொத்தம் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் காபூலில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வார்தாக் மாகாணத்தின் சையத் அபாத் நகரில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. நேட்டோ படையினரை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. முதல் தாக்குதலானாது ஆப்கானிஸ்தான் ராணுவ தலைமையகம் அருகேயும் 2-வது தாக்குதலானது அதே நகரில் டேங்கர் லாரி ஒன்றை வெடிக்க வைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதில் 8 பொதுமக்களும் 4 ஆப்கன் போலீசாரும் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதியன்று இதே மாகாணத்தில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தற்கொலைப் படை தாக்குதலில் 77 அமெரிக்கப் படையினர் படுகாயமடைந்தனர். 5 ஆப்கானியர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications