சோனியாவும் இல்லை, திண்டாட்டத்தில் காங்.. நாடாளுமன்றக் கூட்டம் அம்போதான்?!

சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா போயுள்ளார். அவர் ஒரு வாரம் கழித்தே திரும்புவார் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆபத்பாந்தவனுமாகவும் திகழ்ந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகி விட்டதால், தற்போது காங்கிரஸ் கட்சியில் வலுவான ஒரு தலைவர் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் எதாக இருந்தாலும் சோனியாவே நேரடியாக செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தற்போது சுரங்க ஊழல் முறைகேடுகள் குறித்து பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலைக் கிளப்பி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதலே உருப்படியாக அலுவல் நடைபெறாமல் உள்ளது. கூட்டம் தொடங்கி 8 நாட்களாகியும் அலுவல்கள் நடைபெறாமல் உள்ளது.
இந்த நிலையில்தான் சோனியா காந்தி வெளிநாட்டுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார். இதனால் காங்கிரஸார் பெரும் திண்டாட்டத்தை நாடாளுமன்றத்தில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் காங்கிரஸில் இருந்தாலும் கூட பிரணாப்பைப் போல திறமையாக சமாளிக்கக் கூடிய யாரும் அங்கு இல்லை என்பதால் சோனியா காந்தி இல்லாத இந்த நாட்களில் பாஜகவினரிடம் நிச்சயம் காங்கிரஸார் பெரும் சிக்கலைச் சந்திப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் சுத்தமாக அலுவல் ஏதும் இன்றி முடிந்து போகும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.
எதிர்க்கட்சியினரை மிகுந்த துணிச்சலுடன், எதிர்வாதம் செய்து அவர்கள் பாணியிலேயே சமாளிக்குமாறு காங்கிரஸாருக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த பிப்ரவரி மாதமும் சோனியா மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்று வந்தார். அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வெளிநாடு சென்றருந்தபோது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் மற்றும் திவேதி ஆகியோர் அடங்கிய குழு கட்சி பணிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இம்முறை அப்படி எந்த குழுவையும் காங்கிரஸ் அறிவிக்கவில்லை.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications