சென்னையில் ராத்திரியை ஈரமாக்கிய திடீர் கன மழை... பகல் நேர வெக்கை தணிந்தது!

சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்து வருகிறது. கோடை காலம் போல நேற்று வெயில் கொடுமையாக வாட்டியது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மாலைக்கு மேல் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. விட்டு விட்டுப் பெய்த இந்த கன மழையால் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வெப்ப நிலை வெகுவாக குறைந்து வெக்கை தணிந்தது.
சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளிக் காற்று, இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியது.
புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டு விட்டுப் பெய்து வந்ததால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த திடீர் மழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
வெப்பச்சலனமே இந்த மழைக்குக் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications