ஜியோன் பள்ளி ஸ்ருதி மரண வழக்கு... முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்!

பள்ளி வாகனங்களுக்கு தமிழக அரசு 11 விதிமுறைகளை உருவாக்கி அதை இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதை அனைத்துப் பள்ளிகளின் நோட்டீஸ் போர்டுகளிலும் ஒட்டுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.
சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூரில் உள்ளது ஜியோன் பள்ளி. இந்தப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ருதி, கடந்த ஜூலை 25ம் தேதி மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது, பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மேலும், பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்கி தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும் அது உத்தரவிட்டது. இதுதொடர்பாக 3 முறை இழுத்தடித்த மாநில அரசு இன்று வரைவு விதிமுறைளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் இந்த அறிக்கையினைத் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது...
- பள்ளி வாகனத்தில் ஓட்டுநருடன், உதவியளர் ஒருவரும் கட்டாயமாக இருக்க வேண்டும்.
- பள்ளி வாகனங்களை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
- கல்வி நிறுவன வாகனங்களை மாவட்டந்தோறும் கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
- பள்ளிகள் அளவில் பள்ளி வாகனங்களைக் கண்காணிக்க குழுவை அமைக்க வேண்டும்.
- அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் உருவாக்கப்பட வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ஒருவர் பள்ளி வாகனக் கண்காணிப்புக் குழுவிலும் இருக்க வேண்டும்.
- வாகன பராமரிப்புக்காக பள்ளிகளில் சிறப்பு பிரிவு இயங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், இவற்றை அனைத்துப் பள்ளிகளிலும் ஒட்டுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications