தமிழர்கள் மனதை புண்படுத்த வேண்டாம்!-ஏ.கே. அந்தோனியிடம் திமுக எம்பிக்கள் கோரிக்கை

தமிழ்நாட்டில் பயிற்சி பெற வந்த இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பிற மாநிலங்களில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ் ஆர்வலர்களும், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பலத்த எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து மக்களவையிலும், மாநிலங்களையிலும் திமுக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். மத்திய அரசு இலங்கை ராணுவத்தினருக்கு துணை போகிறதா என்றும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் தன்னை சந்திக்குமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கேட்டுக்கொண்டார். அதன்பேரில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்பிக்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் ஏ.கே.அந்தோணியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.
அப்போது இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்றும், ஏற்கனவே பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர்.
இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு சபையால் அமைக்கப்பட்ட குழுவால் தெரிவிக்கப்பட்ட நிலையில், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது, இலங்கையில் நடைபெற்ற தமிழினப்படுகொலையை இந்தியா ஆதரிக்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளனர். எனவே பாதுகாப்புத்துறை அமைச்சர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்பிக்கள் கேட்டுக்கொண்டனர்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications