மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. முதலிடத்தில் பெங்களூர்- 4வது இடத்தில் சென்னை!

டெல்லியில் 132 பேரும் அகமதாபாத்தில் 102 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சென்னையில் 100 பேர் வரை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வலி நிறைந்த புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது தேசிய குற்றவியல் ஆவண காப்பகம்
சட்டென்று வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் இளையதலைமுறையினர் இன்றைக்கு பெருகி வருகின்றனர். தூக்குப் போட்டுக்கொள்வது, மாடியில் இருந்து குதித்து உயிர்விடுவது, விஷம் குடிப்பது, ரயில்முன் பாய்வது என சடுதியில் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். உயிருக்கு விலை கிடையாது. அற்ப விசயத்திற்காக மனதொடிந்து போய் விலைமதிப்பில்லாத உயிரை மாய்த்துக்கொள்கின்றனர் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
நாடுமுழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மேற்கு வங்க மாநிலம் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இங்குமட்டும் 556 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 527 பேரும் ஆந்திராவில் 493 பேரும் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டுள்ளதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம் ஒன்று. மகாராட்டிரா மாநிலத்தில் 453 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும் தேசிய குற்றப்புலனாய்வு நிறுவனத்தின் புள்ளிவிபரத்தில் கூறப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் கொல்கத்தா நகரில் மட்டும் உயரமான கட்டடத்தின் மேலிருந்து குதித்து உயிரை விடுபவர்களின் எண்ணிக்கை கடந்த 6 ஆறு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர் மனநலமருத்துவர்கள். இதற்குக் காரணம் ஏமாற்றம், விரக்தியின் உச்சத்தில் எடுக்கப்படும் முடிவுதான் இது என்கிறார் KEM மருத்துவமனையின் உளவியல் பிரிவு நிபுணர்.
2007 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையில் மும்பை முதலிடத்தில் இருந்தது. 33 பேர் வரை மாடியில் இருந்து குதித்து உயிரை விட்டுள்ளனர். பின்னர் இது படிப்படியாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு 21 பேர் வரை மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளனர். மும்பை நகரில் 2008 ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டுவரை 30 வயதிற்குட்பட்ட பெண்கள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேசமயம் 45 வயது முதல் 59 வயது வரை உடைய ஆண்கள் அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
நமக்கு யாரும் உதவிக்கு இல்லை. கைவிடப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் தோன்றும் போதும், ஒருவித நம்பிக்கையின்மையும் விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு சென்று தற்கொலைக்கு தூண்டுகிறது. இதுபோன்ற சூழலில் தனித்து விடப்படுவதும் தற்கொலை செய்து கொள்ள காரணமாகிறது. எனவே ஏமாற்றமடைந்தோ, விரக்தியுடனே இருப்பவர்களிடம் அமைதியாக பேசி அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்ற முயலவேண்டும் என்றும் உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்வது என்பது வலி நிறைந்தது. அது உணர்ச்சிப்பூர்வமாக எடுக்கப்படும் முடிவுதான். எனவே அதுபோன்ற தருணங்களில் அவர்களை உயரமான கட்டடங்களின் மீது ஏறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர்.
தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்வதை விடவோ, வேறு விதமான பொருட்களின் மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதை விட இது எளிதானது என்று முடிவெடுப்பதினாலேயே மாடியில் ஏறி உடனே கீழே குதித்து உடனே உயிரை விட்டு விடுகின்றனர். வாழ்வது ஒருமுறைதான் போராட்டம் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டாலே வாழ்க்கையை ருசியுடன் வாழலாம். அதை விடுத்து தற்கொலை செய்து கொள்வது என்பது கோழைத்தனமானது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications