ரூ.7.47 லட்சத்தில் கட்டப்பட்ட சென்னை அண்ணா ஆர்ச்சை இடிக்க ரூ.8.20 லட்சம் செலவு

சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் 3வது நிழற்சாலை சந்திப்புகளை இணைக்கும் பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிக்காக அண்ணா நகர் நுழைவு வாயிலில் உள்ள அண்ணா ஆர்ச் எனப்படும் 2 நுழைவு வாயில் வளைவுகளை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது.
நுழைவு வாயில்களை இடிக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நுழைவு வாயில்களை இடிக்க பயன்படுத்தப்படும் நவீன கருவிகள் அவ்வப்போது பழுதடைவதால் இந்த பணி தொய்வடைந்துள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் கூறுகையில்,
நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள இடையூறாக உள்ளவற்றை இடித்து தள்ளி வந்தோம். இந்நிலையில் நுழைவு வாயில்களை டைமண்ட் கட்டிங் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் வெட்டி எடுத்த பழக்கம் எங்களுக்கு இல்லை. மேலும் இந்த பணியைச் செய்ய பணியாளர்களும், நவீன கருவிகளும் இல்லை.
இதனால் 2 நுழைவு வாயில்களை ரூ.8.20 லட்சம் செலவில் 2 நாட்களில் இடிக்கும் பொறுப்பை தனியாரிடம் கொடுத்தோம். கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7.47 லட்சம் செலவு செய்து இந்த நுழைவு வாயில்கள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போதை அதை இடிக்க ரூ.8.20 லட்சம் செலவாகிறது.
இந்த நுழைவு வாயில் மாநகராட்சியின் சொத்து. இங்கு மேம்பாலம் கட்டிய பிறகு மாநகராட்சி கூறும் இடத்தில் இதேபோன்ற நுழைவு வாயில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சியிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு வாயிலை கட்டிக் கொடுக்க நெடுஞ்சாலைத் துறை தயாராக உள்ளது. ஆனால் இதேபோன்ற நுழைவு வாயிலை கட்ட ரூ.1 கோடி செலவாகும்.
சுண்டக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்று கிராமங்களில் கூறுவது போல் உள்ளது.
இது குறித்து ஒப்பந்தக்காரர்கள் கூறுகையில்,
அண்ணா நுழைவு வாயிலை இடிக்க பயன்படுத்தப்படும் கிரேனின் மதிப்பு ரூ.16 கோடி. அது 450 டன் எடையத் தாங்கும். அண்ணா நுழைவு வாயிலின் எடை வெறும் 82 டன் ஆகும். அதனால் கிரனேனின் பணி பழு 30 சதவீதம் மட்டுமே. நுழைவு வாயிலை அவசரப்படாமல் பார்த்து பக்குவமாக அகற்ற வேண்டும். தொழுலாளர்களின் உயிரையும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கருவியையும் கருத்தில் கொண்டே பணியாற்ற வேண்டியுள்ளது என்றனர்.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications