மே.ங்கம்: 100 பேருடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பயணிகள் பேருந்து- 20 பேர் மட்டும் மீட்பு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பங்குரா மாவட்டத்தில் 100 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 20 பேர் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதால் எஞ்சியவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் ஜார்கிராமில் இருந்து பர்த்வான் மாவட்டம் துர்காபூர் நோக்கி இப்பேருந்து சென்று கொண்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பங்குரா அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் இந்த பயணிகள் பேருந்தும் சிக்கியது. வெள்ளத்தில் 100 பயணிகளுடன் பேருந்து அடித்துச் செல்லப்பட்டது. பேருந்தில் இருந்து இதுவரை 20 பேர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை என்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications