அதிமுகவிலிருந்து பெருந்துறை மாஜி எம்.எல்.ஏ. நீக்கம்: ஜெ நடவடிக்கை
சென்னை: அதிமுகவில் இருந்து பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ பொன்னுதுரையை நீக்கி முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் காட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.பொன்னுதுரை (பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.), தெய்வசிகாமணி (பள்ளிபாளையம் பேரூராட்சி செயலாளர்), ராஜாமணி (பெருந்துறை ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்), சிவசுப்பிரமணியம் (பெருந்துறை ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications