நிலக்கரி சுரங்க ஊழலில் பாஜக தலைவர் கட்காரியின் உதவியாளருக்கு தொடர்பு
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பாஜக தலைவர் நிதின் கட்காரியின் உதவியாளர் அஜய் சன்செட்டிக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் இதுவரை காங்கிரஸார் பெயர் மட்டுமே அடிபட்டு வந்த நிலையில் நேற்று திமுக மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் பெயரும் அடிபட்டுள்ளது. அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் லாபம் அடைந்தவர்களில் பாஜக தலைவர் நிதின் கட்காரியின் முக்கிய உதவியாளரான அஜய் சன்செட்டியும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
ஆனால் பாஜக இந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு இது குறித்த விசாரணைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில்,
பாஜக தலைவர் கட்காரியின் பிசினஸ் பார்ட்னர் அஜய் சன்செட்டி சத்தீஸ்கரில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மூலம் ரூ.490 கோடி லாபம் சம்பாதித்துள்ளார். சத்தீஸ்கர் சுரங்க மேம்பாட்டு கழகமும், அஜய் சன்செட்டியும் சேர்ந்து சத்தீஸ்கரில் சுரங்க வியாபாரம் செய்தனர். அதில் கிடைத்த ரூ.1,000 கோடி லாபத்தில் அஜய்க்கு ரூ.490 கோடி கிடைத்தது என்றார்.
முன்னதாக நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை பதவி விலகக் கோரி பாஜக செய்த தொடர் அமளியால் மழைகால கூட்டத்தொடரின் 13 நாட்களும் எந்த அரசு பணிகளும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டுக்கு முழுக்க முழுக்க பிரதமரே பொறுப்பு என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு நெருக்கமாக உள்ள தொழில் அதிபர்களின் நிறுவனங்களுக்கு அதிக அளவில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications