சங்ககிரி அருகே தனியார்-அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி-18 பேர் படுகாயம்
சேலம்: சங்ககிரி அருகே தனியார் பஸ்சும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஈரோடு கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ், நேற்று மாலை 5.45 மணியளவில், சங்ககிரியை அடுத்த ஊஞ்சப்பாறை என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் சங்ககிரியில் இருந்து பவானியை நோக்கி சென்ற எஸ்.ஆர்.வி என்ற தனியார் பஸ் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் 2 பஸ்களும், எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் அரசு பஸ்சின் ஓட்டுநரான திருச்செங்கோட்டை சேர்ந்த பழனியப்பன்(35), மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணிக்கம்மாள்(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த வாழப்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவி கார்த்திகா(20) சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சதீஷ்(19), அர்ஜூன்(24), ரபீக்(29), செங்கோடன்(24), சுதாகர்(8), மகேஷ்குமார்(50), ஜெகநாதன்(47), வளர்மதி(38), பழனியம்மாள்(55), ஜெயமணி(42), அருக்காணி (55), குணசேகர்(59), சின்னப்பொண்ணு(40), சுரேஷ்(26), குமரவேல்(54) உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இவர்களில் லேசான காயமடைந்தவர்களுக்கு சங்ககிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த 18 பேர் சேலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேலம் எஸ்.பி.(பொறுப்பு) கண்ணம்மாள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். மேலும் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் சிவராஜ், வட்டாட்சியர் ராஜேந்திரன், அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி, கலெக்டர் மகரபூஷணம் ஆகியோரும் விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிட்டு, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்திற்காக காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications