ஆஸி. செல்ல முயன்றதாக தமிழக அகதிகள் முகாமைச் சேர்ந்த 84 பேர் மங்களூரில் தடுப்பு

மங்களூரில் கர்நாடக மேற்கு சரக ஐஜி பிரதாப் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் சென்னை, மதுரை, புதுக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 84 பேர் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி செல்ல முயற்சித்த போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரிடமும் ரூ30 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை ஏஜெண்டுகள் வசூலித்துள்ளனர். அகதிகளிடம் வசூலித்த பணத்தில் மங்களூரில் ரூ11.50 லட்சத்துக்கு படகு ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது. 6 ஆயிரம் லிட்டரும் பெரிய அளவில் உணவுப் பொட்டலங்களும் படகில் வைத்திருந்தனர்.
தடுத்து வைக்கப்பட்ட 84 பேரில் 22 பேர் பெண்கள். 56 ஆண்கள். 6 குழந்தைகள் அடங்குவர். தற்போது கைது செய்யப்பட்ட ஏஜெண்டுகள் ஏற்கெனவே கொல்லம் மற்றும் பொன்னம் கடற்பரபில் இருந்து இலங்கைக்கு அகதிகளை ஏற்றிச் செல்ல முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.கர்நாடகத்தில் இருந்து முதல் முறையாக அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க இவர்கள் முயற்சித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம். அவர்களிடம் அகதிகளை ஒப்படைக்க இருக்கிறோம். ஏஜெண்டுகள் 13 பேரும் ஈழத் தமிழர்கள் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications