20 வயது நீதியரசன் சொல்றதைக் கேட்க மறுக்கிறார்... 35 வயது ஜானகி புகார்!
திருவண்ணாமலை: தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்து விட்டு இப்போது திருமணம் செய்து கொள் என்று சொன்னால் சொல் பேச்சைக் கேட்க மறுக்கிறார் என்று 20 வயது வாலிபர் மீது 35 வயதுப் பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த உடையூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் நீதியரசன். வயது 20 ஆகிறது. இவர் மீது ஜானகி என்ற 35 வயதுப் பெண் போளூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் ஜானகி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், நான் எனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டேன். எனக்கு 5 வயதில் மகன் இருக்கிறான். இருவரும் தனியாக வசித்து வருகிறோம்.
என்னுடைய வீட்டில் வேலை செய்வதற்காக வந்த நீதியரசன் என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தேன். என்னுடன் பலமுறை நீதியரசன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் என்னிடம் அடிக்கடி செலவுக்குப் பணம் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவரிடம் என்னைத் திருமணம் செய்து கொள் என்று கேட்டேன். ஆனால் அவர் எனது சொல் பேச்சைக் கேட்க மறுக்கிறார். திருமணத்திற்கு மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜானகி.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய நீதியரசன், கைது செய்வதிலிருந்து தடை உத்தரவு வாங்கி விட்டார். உயர்நீதிமன்றம் நீதியரசனுக்கு கொடுத்த முன் ஜாமீன் உத்தரவில், அவரைக் கைது செய்யக் கூடாது. 8 வாரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும், நீதியரசன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 7ம் தேதி போளூர் மகளிர் காவல் நிலையத்தில் நீதியரசனை அவரது வக்கீல்கள் ஒப்படைத்தனர். ஆனால் கடந்த 3 நாட்களாக அவரை வெளியே விடாமல் விசாரணை என்ற பெயரில் மகளிர் போலீஸார் தங்களது பொறுப்பிலேயே வைத்துள்ளதாக நீதியரசனின் வக்கீல்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் அந்தப் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்கள்.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கும்பல்.. அதிரடி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications