30 நாட்களில் புதிய பாஸ்போர்ட்டாம்.. ஆனால், நிஜத்தில்?
மும்பை: 30 நாட்களில் புதிய பாஸ்போர்ட், 15 நாட்களில் பாஸ்போர்ட் புதுப்பித்துக் கொடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட் பெற மக்கள் இனி காத்திருக்கத் தேவையில்லை 30 நாட்களில் புதிய பாஸ்போர்ட்டும், 15 நாட்களில் பாஸ்போர்ட் புதுப்பித்தலும் செய்து தரப்படும் என்று மத்திய வெளியுறவத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தட்கல் முறையில் விண்ணப்பித்தால் 1 முதல் 7 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர மக்களின் வசதி கருதி பல்வேறு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதையடுத்து தான் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் குறித்த போலீஸ் விசாரணை அறிக்கை 21 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும். ஆனால் விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் முறையாகத் தெரிவிக்காமல் இருப்பதால் போலீசார் தங்கள் அறிக்கையை சமர்பிக்க காலதாமதம் ஆகிறது. விரைவில் பாஸ்போர்ட் கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் 74 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அரசு என்னதான் விதிமுறைகளை எளிதாக்கினாலும் மக்கள் பாஸ்போர்ட் பெற அல்லல்படுவது தொடர்கிறது என்பது நிஜமோ நிஜம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications