உங்க சண்டையில நான் கொடுத்த 100 ரூபாயை மறந்துறாதீங்க!-இது முலாயம்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் எனது ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் மத்தியில் ஆட்சியமைக்க முடியாது என்று கூறியுள்ளார் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்.

மாநிலத்தில் ஆட்சியை மகன் அகிலேஷ் யாதவிடம் தந்துவிட்ட முலாயம் சிங் யாதவுக்கும், நரேந்திர மோடி, ராகுல் காந்தி வகையறாக்களுடன் சேர்ந்து பிரதமர் ஆசை வந்துவிட்டது போல.

சமாஜ்வாடி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடந்தது. அதில் பேசிய முலாயம், 2014ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நமது ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. அந்த அளவுக்கு நாம் வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும்.

நமது எல்லை உத்தரப் பிரதேசத்தோடு சுருங்கிவிடக் கூடாது. நாம் இனி தேசிய அளவில் பரவ வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஏராளமான ஊழல் பிரச்சனைகளால் காங்கிரஸ் தடுமாறிக் கொண்டுள்ளது. பாஜக இப்போதெல்லாம் முன்னால் போவதே கிடையாது. பின்னால் சரிவதே வழக்கமாகிவிட்டது.

அனைத்து மாநிலங்களில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் நமது கட்சியை முதல் கட்டமாக வலுப்படுத்த வேண்டும், உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+