கூத்தங்குழியில் உதயகுமார்: கைது நடவடிக்கையை தடுக்க ஊரைச்சுற்றி வெடிகுண்டுகள் புதைத்த கிராமத்தினர்?

நேற்று இரவு கூடங்குளம் காவல் நிலையத்தி்ல் சரணடைவதாக இருந்த கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோரை 50 இளைஞர்கள் குண்டுகட்டாக தூக்கி படகில் வைத்து கடலுக்குள் சென்றனர். தற்போது உதயகுமார் கூத்தங்குழி மீனவ கிராமத்தில் உள்ள ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கூத்தங்குழி கிராமத்தை முற்றுகையிட்டுள்ளனர். அவர்கள் ஊருக்குள் புகுந்து உதயகுமாரை கைது செய்வதை தடுக்க அந்த கிராம மக்கள் ஊரைச் சுற்றி வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இது தவிர மணலில் வலைகளை புதைத்து வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இதனால் போலீசார் கிரமாத்திற்குள் நுழைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி ஊருக்குள் புகுந்தால் விபரீதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் உதயகுமாரை கைது செய்வது குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.ஜி.க்கள் கண்ணப்பன், ராஜேஷ்தாஸ் ஆகியோர் இடிந்கரையில் உள்ள சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்பு கொண்டு உதயகுமாரை சரணடையுமாறு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications