ஜேப்பியார் மீது ரூ.80 கோடி நில அபகரிப்பு புகார் கொடுத்த 81 வயது மூதாட்டி

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் கிருஷ்ண மோகன்லால் பட்னானி (81). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நான் கடந்த 1974ம் ஆண்டு ராஜலட்சுமி என்பவரிடம் இருந்து செம்மஞ்சேரியில் 3.96 ஏக்கர் நிலம் வாங்கினேன். அதை நீலாங்கரை சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது எனக்கு 81 வயது ஆகிவிட்டதால் எனது சொத்தை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுக்க முடிவு செய்தேன். அதன்படி செம்மஞ்சேரியில் உள்ள எனது நிலத்தை பார்வையிட்டபோது அந்த இடத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
எனது இடத்தை வி.சுந்தரம், வி.நாராயணன் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் போலி பட்டா தயார் செய்து அதனை ஜேப்பியார் கல்வி குழும சேர்மன் ஜேப்பியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இதனை நீலாங்கரை சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
நான் சுந்தரத்திற்கு விற்பனை செய்ததாகவும், அவர் ஜேப்பியாருக்கு விற்றதாகவும் போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், எந்த உண்மையும் இல்லை. எனவே, ரூ 80 கோடி மதிப்புள்ள எனது நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில் ஜேப்பியார், சுந்தரம், நாராயணன், அனிதா ஆகியோர் கூட்டு சதி செய்து எனது சொத்தை அபகரித்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது நிலைத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் பற்றி விசாரணை நடத்த போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications