தூத்துக்குடியில் 3வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தம்: கடற்கரை கிராமங்களில் பதட்டம்
தூத்துக்குடி: கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், அதற்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீதான போலீஸ் தடியடியை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மீனவர்களின் வேலை நிறுத்தம் தொடர்வதால், மீனவ கிராமங்களில் பதட்டம் நீடிக்கிறது.
கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி, கூடங்குளம் போராட்ட குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். சிலரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும், போராட்டக்காரர்கள் மீதான தடியடியை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. இதனால் திருச்செந்தூர், வேம்பார், புன்னக்காயல், மணப்பாடு, தூத்துக்குடி போன்ற கடற்கரை பகுதியை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் கூடங்குளம் போராட்ட குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட அனைத்து கடலோர மீனவ மக்கள் சார்பில் தூத்துக்குடியில் இன்று 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இடிந்தகரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு தூத்துக்குடி மீனவர்கள் சிலர் அரிசி, பருப்பு, எண்ணை போன்ற உணவு பொருட்களை கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் உணவு பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்தனர்.
ஆனால் கூடங்குளத்தில் 3 நாள் வன்முறைக்குப் பிறகு தற்போது அமைதி திரும்பி வருகிறது. இப்பகுதியில் இன்று மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். எனினும் இடிந்தகரையில் போராட்டம் தொடர்வதால் அங்கு பதற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. இதையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவெடுக்க உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications