ஒபாமாவுக்கு ஆதரவு பெருகிறது - சி.என்.என் கருத்துக் கணிப்பு

ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்கு முந்தைய கருத்துக் கணிப்பில் இது 48% - 48% என இருவருக்கும் சரி சம்மாக இருந்தது. மாநாட்டில் க்ளின்டனின் ஆதாரப்பூர்வமான பேச்சும், ஒபாமாவின் ஏற்புரை பேச்சும் இந்த மாற்றத்திற்கு பெருமளவில் காரணமாக கருதப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், இன்னும் நிறைவேற்ற வேண்டியவைகள் என ஒபாமா விளக்கமாக பட்டியலிட்டார். அவரது பேச்சு தெளிவான கொள்கைகளை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பொதுவான வாக்காளர்களுக்கு அவர் மீது நம்பகத் தன்மையை அதிகரிக்கவும் காரணமாக அமைந்து விட்டது எனவும் கூறப்படுகிறது.
'நாட்டை வழி நடத்த யார் சிறந்த தலைவர்' என்ற தனிப்பட்ட செல்வாக்கிலும் ராம்னி 41 சதவீத்த்துடன் பின் தங்கி, ஒபாமா 51 சதவீதம் பெற்று முன்னிலையில் இருக்கிறார் என சி.என்.என் தெரிவித்துள்ளது.
9/11 நினைவு தினம்
நேற்று செப்டம்பர் 11-ம் தேதி. இரட்டை கோபுரம், பெண்டகன் மீதான தாக்குதல்கள் நடந்த நினைவு தினம். அதிபர் ஒபாமா பெண்டகனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
'மிகவும் இருட்டான நாள் கூட வெளிச்சத்திற்கு வழியை காட்டும் என்ற நமது நம்பிக்கைக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த நினைவு தினம் இருக்கிறது' என்றார் அவர்.
முன்னதாக ஒபாமாவும், மிஷல் ஒபாமாவும் வெள்ளை மாளிகையில், தலைவணங்கி இந்த துக்க நாளை அனுசரித்தனர். இரட்டைக் கோபுரம் தகர்க்ப்பட்ட இடத்தில் பலியான 2753 பேர்களின் பெயர்களும் உறவினர்கள், நண்பர்களால் நினைவு கூறப்பட்ட்து. இந்த நிகழ்ச்சியில் எந்த அரசியல்வாதிகளும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு குறைவான நாட்களே இருந்த போதிலும், இந்த நாளில் அதிபர் ஒபாமாவும், துணை அதிபர் பைடனும் எந்த பிரச்சாரமும் மேற்கொள்ளவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications