சென்னையில் கியாஸ் சிலிண்டர் கசிவால் தீ: 3 பேர் கருகி பலி- 2 பேர் கவலைக்கிடம்

சென்னை திருமங்கலம் அம்பேத்கார் நகர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் சேகர்.அவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர்களது மகன் சுரேஷ் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஜோதிலட்சுமி நேற்று மாலை வீட்டில் சமையல் செய்ய முயன்றார் . ஆனால் கியாஸ் சிலிண்டரில் அடைப்பு இருந்ததால் அண்ணா நகர் கியாஸ் ஏஜென்சிக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து கியாஸ் ஏஜென்சியின் ஊழியர் துரைராஜ் என்பவர் வந்து அடைப்பை நீக்கிக் கொண்டிருந்தார். இதை ஜோதிலட்சுமியின் அண்ணன் ரவியின் குடும்பத்தினரும் பக்கத்து வீட்டாரும் அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அடைப்பு சரி செய்யப்பட்டுவிட்டதாக ஊழியர் துரைராஜ் கூறியுள்ளார். ஆனால் ரெகுலேட்டர் சரியாக பொருத்தப்படவில்லை. இதை கவனிக்காத ஜோதிலட்சுமி தீயை பற்ற வைக்க அதற்குள் கேஸ் கசிந்ததால் குபீர் என வீடு முழுக்க தீ பிடித்தது. இதில் ஜோதிலட்சுமி உப்டட 5 பேரும் தீயில் சிக்கினர்.
அப்போது சிலிண்டரில் ரெகுலேட்டர் சரியாக பொருந்தாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெளியேறி வீடு முழுவதும் பரவியது. இதை அறியாத நிலையில் ஜோதிலட்சுமி அடுப்பை ஆன் செய்து தீ பற்ற வைத்துள்ளார். உடனே தீ குபீர் என்று வீடு முழுவதும் பற்றிக்கொண்டது. இதில் 5 பேர் மீது தீ பற்றியது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. 5 பேரில் மூவர் உடல் கருகி உயிர் இழந்தனர் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications