Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துக்க வீட்டில் ராம்னியின் அரசியல்... அமெரிக்காவையும் தொற்றிக் கொண்ட 'தமிழக கலாச்சாரம்'!

Subscribe to Oneindia Tamil

Romney
வாஷிங்டன்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ராம்னியின் குற்றச்சாட்டு அதிருப்தி அலையை உருவாக்கியுள்ளது.

அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும், அமெரிக்காவுக்கு பிரச்சனை என்றால் குடியரசு கட்சியினரும் , ஜனநாயகக் கட்சியினரும் ஒருமித்த குரல் கொடுப்பது வழக்கம். தமிழகத்தில் தான் எதிர்க்கட்சி என்றால் எதிரிக் கட்சியாகும் பார்க்கும் நிலை என்றால் அமெரிக்காவில் அப்படி இல்லாமல் இருந்தது.

செப்டம்பர் 11ம் தேதி துக்க நாளாக அனுசரித்து வரும் வேளையில், பதினோராம் நினைவு ஆண்டில் பெரும் இடியாக லிபியாவில் அமெரிக்க தூதர், தீவிரவாதிகளிடம் பலியானார். தூதரகம் மீது நடந்த குண்டு வீச்சு தாக்குதல்களில் கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. பாதுகாப்பான அறைக்கு அழைத்து செல்லப்பட்ட தூதர் கிரிஸ்டோபர் ஸ்டீவன்ஸ், புகை மூட்டத்தில் மூச்சு திணறி இறந்தார். அவருடன் மூன்று அதிகாரிகளும் பலியானார்கள்.

இந்த விவரங்கள் முழுவதுமாக வெளியாக நிலையில், முதல் கட்ட தாக்குதல் தகவல் கிடைத்த மாத்திரத்திலேயே, ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார் ராம்னி. அவரது குற்றச்சாட்டு பேச்சுக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் தூதர் பலியான விவரங்களும் தெரிய வந்தன.

யார் தாக்கினார்கள், என்ன நோக்கம், என்ன சேதம் என்று முழுமையாக தெரிந்து கொள்ளும் முன்பாகவே அவசரக்குடுக்கையாக அரசியல் ரீதியாக அதிபர் ஒபாமாவை கண்டித்து பேசியது நாடெங்கிலும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

அமெரிக்காவுக்கு பிரச்சனை என்ற நேரத்தில் ஒன்றுபட்டு நிற்காமல், இறந்தவர்களுக்கு அஞ்சலி கூட செலுத்தாமல், இப்படி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறாரே என்று தொலைக்காட்சிகளிலும் போட்டி போட்டு குரல் எழுப்பினர். குடியரசுக் கட்சி தலைவர்களிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பி திணறடித்தனர்.

ஹிலாரி - ஒபாமா

வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுடன், தற்போதைய நிலமைகளை ஆராய்ந்து அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான ஆலோசனை நடத்தினார் ஒபாமா.

இது ஒரு குறிப்பிட்ட சிறு குழுவினரின் தாக்குதல்தானேயன்றி, லிபிய மக்களுக்கோ லிபிய அரசாங்கத்திற்கோ இதில் தொடர்பு இல்லை என்று ஹிலாரி தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையே லிபிய பிரதமர் அமெரிக்க அரசிடமும், மக்களிடமும், நடந்த பயங்கர நிகழ்வுக்காக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

இது கோழைத்தனமான தாக்குதல். அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு அதற்குரிய நீதி வழங்கப்படும் என்று ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

ராம்னியின் கருத்து பற்றி ‘ துப்பாக்கியை சுட்ட பிறகு குறி பார்க்கும் ராம்னி' என்று வர்ணித்துள்ளார்.

அவரது பேச்சு முறையற்றதா என்ற கேள்விக்கு, அதை அமெரிக்க மக்களின் கருத்துகளுக்கே விட்டு விடுகிறேன் என்றார்.

முன்னதாக துக்கத்தை அனுசரிக்கும் பொருட்டு அமெரிக்க கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க உத்தரவிட்டார்.

ராம்னிக்கு பின்னடைவு

இது வரையிலும் உள்ள் கருத்துக் கணிப்புகளில் பின் தங்கியிருக்கும் ராம்னிக்கு நேற்றைய அவரது கருத்து மேலும் எமனாக மாறியுள்ளது. துக்க வீட்டில் கூட அரசியல் பேசுகிறாரே என்று பல்வேறு தரப்பிலிருந்தும் அவர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கியுள்ளன

தமிழக அரசியல் வாடை அமெரிக்கா வரை போய் விட்டதோ?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+