டீசல் விலை உயர்வை வாபஸ் பெற லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு, வருடத்துக்கு ஒரு வீட்டுக்கு இப்போதைய விலையான ரூ.386.50க்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி கூறியதாவது:
மத்திய அரசு டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அவ்வாறு திரும்ப பெறாவிட்டால் நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.
டீசல் விலை உயர்த்தப்பட்டதால் பஸ்சுக்கு கட்டணம், கிலோ மீட்டருக்கு விலை நிர்ணயித்து அறிவிக்கப்பட்டது போல் லாரிக்கும் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு டன்னுக்கு இவ்வளவு கட்டணம் என்று அரசே நிர்ணயம் செய்து தர வேண்டும். டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பாமர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிடும். மேலும் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் ஓரிரு நாளில் கூடி டீசல் விலையை கண்டித்து வேலை நிறுத்தம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications