டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு.. விலைவாசி கடுமையாக உயரும்!

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
விலை உயர்வுக்கு முன் டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.41.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.46.95-ஆக விலை உயர்ந்துள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 15 மாதங்களுக்குப் பின் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த அளவுக்கு ஒரேயடியாக டீசல் விலை இதுவரை உயர்த்தப்பட்டதும் இல்லை. ரூ. 5 வரை உயர்த்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டதால் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.48.91 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை ஒரு லிட்டர் டீசல் ரூ.43.91-க்கு விற்கப்பட்டது.
டீசல் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணங்கள், லாரி- வேன் கட்டணங்கள் உயரவுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், உணவு தானியங்கள், பால் உள்ளிட்டவையின் விலைகளும், ஹோட்டல்களில் காபியில் ஆரம்பித்து அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயரும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications