பஸ் ஸ்டிரைக்: 'ஐடி நகரமான' பெங்களூரில் தனியார் பஸ்களில் கூரை மீது பயணிக்கும் மக்கள்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சம்பள உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருவதால், பெங்களூரில் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஐடி நகரமான பெங்களூரில் குறைந்த அளவில் தனியார் பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் கிராமப் புறங்களை போல மக்கள் தனியார் பஸ்களின் கூரைகளின் மீது ஆபத்தான முறையில் பயணித்தனர்.

சம்பள உயர்வு, தற்கால பணியாளர்களை நிரந்தரமாக்குவது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பெங்களூரில் 90 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், அலுவலக பணியாளர்கள் உட்பட பலதரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக ஐடி தொழில் நகரமான பெங்களூர் கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும், 26 ஆயிரம் மெக்சி கேப் வாகனங்களும் இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பஸ்களில் கடும் பயணிகள் நெரிசல் காரணமாக, பயணிகள் பலரும் பஸ் கூரையின் மீது பயணித்தனர்.

ஆட்டோ, வேன் ஆகியவற்றில் அதிக கட்டணம் செலுத்தி பொதுமக்கள் பயணித்தனர். பயணிகள் இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி கொண்ட ஆட்டோ டிரைவர்கள் சிலர், ஆட்டோக்களில் மீட்டர் போடாமல் தாறுமாறாக கட்டணத்தை வசூலித்தனர். பயணிகளின் பாதிப்பை குறைக்க மற்ற மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு அதிகளவில் பஸ்களை இயக்குமாறு, கர்நாடகா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை கைவிட கோரி நேற்று இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி மற்றும் பி.எம்.டி.சி. தொழிலாளர்களின் 5 தொழிற்சங்கங்களின் கூட்டு செய்தி தொடர்பாளர் ஆனந்தா சுபா ராவ் கூறியதாவது,

கர்நாடக மாநிலத்தின் பொருளாதார நிலை மற்றும் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, தொழிலாளர்களுக்கு 30 சதவீதம் சம்பள உயர்வு அளிக்க மாநில அரசு மறுத்து வருகிறது. எனவே வேலை நிறுத்தத்தை தொடர்வது என்று முடிவு செய்துள்ளோம். போராட்டத்தில் ஈடுபடுவதற்காக எஸ்மா சட்டம் பாய்ந்தாலும், தொழிலாளர்கள் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+